தலைநகர் சென்னையில் சமீபகாலமாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் மையப்பகுதியில் ஒருவர் விரட்டிச் சென்று வெட்டிக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட நபர் குற்றப் பின்னணி கொண்டவர் என்றும், சமீபத்தில் தவெகவில் இணைந்தவர் என்றும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் போதை கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுமையாகச் செயலிழந்துவிட்டதாகவும், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டதற்கு இச்சம்பவங்களே சாட்சி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


