நாட்டின் ரயில்வே இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் நான்கு முக்கிய ரயில் பாதை விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி,
அரக்கோணம் - ரேணிகுண்டா இடையே 77 கி.மீ தொலைவிற்கு மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
மேலும், ஒயிட்ஃபீல்ட் - பங்காரப்பேட்டை இடையே 47 கி.மீ தொலைவிற்கு மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதை அமைக்கவும், ஓசூர் - ஓமலூர் இடையே 147 கி.மீ தொலைவிற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், சேலம் - கரூர் - திண்டுக்கல் இடையே 159 கி.மீ தொலைவிற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.




