2024-25 நிதியாண்டில் இந்தியாவில் செயல்படும் முன்னணி யுபிஐ (UPI) நிறுவனங்களின் வருவாய் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அவுட்லுக் பிசினஸ் அறிக்கையின்படி, இந்த நிதியாண்டில் போன்பே (PhonePe) நிறுவனம் ரூ.7,114.8 கோடி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பேடிஎம் (Paytm) நிறுவனம் ரூ.6,900 கோடி வருவாயுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
நவி (Navi) நிறுவனம் ரூ.2,565.4 கோடியும், கூகுள் பே (Google Pay) நிறுவனம் ரூ.1,533.3 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளன. மேலும், சூப்பர்.மணி (super.money) நிறுவனம் ரூ.93.97 கோடியும், பீம் (BHIM) செயலி ரூ.3.7 கோடி வருவாயும் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

