தொடர் வார விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டதால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதனிடையே, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



