தனது பணிச் சூழலுக்கு இடையிலும் அழைப்பை ஏற்று அவர் வருகை தந்தது மகிழ்ச்சியளிப்பதாக அஜித் குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முதலமைச்சர் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லண்டனில் உள்ளதைப் போன்ற ரேஸிங் டிராக்கை சென்னையில் உருவாக்க முதலமைச்சர் ஆர்வம் காட்டி வருகிறார். லண்டனில் நடப்பது போன்ற போட்டிகள் சென்னையிலும் நடைபெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என அஜித் குமார் கூறினார்.



