பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா (1936-2026) காலமானார். அவரது மறைவு குறித்து புதிய தலைமுறை டிஜிட்டல் ஊடகத்திற்கு இரங்கல் செய்தி அளிக்கும்போது, பேச்சாளர் ராஜா உணர்ச்சிவசப்பட்டு தேம்பித் தேம்பி அழுதார்.
தனது இரங்கல் செய்தியில் ராஜா குறிப்பிடுகையில், "என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஐயா உடனேயே இருந்துவிட்டேன். எங்கள் வாழ்க்கையைச் சரிப்படுத்தி, நெறிப்படுத்தியவர் அவர்தான். நான் கிராமத்துச் சிறுவனாக இருந்தபோது, எனக்குள் இலக்கிய ஆர்வத்தை விதைத்து, என்னாலும் பேச முடியும் என்ற தன்னம்பிக்கையை அளித்து, என்னை உலக அளவில் ஒரு பேச்சாளராகக் கொண்டு சேர்த்தவர் அவர்" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.



