லண்டன் பயணம் மேற்கொள்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், பொதுமக்களுக்கான சர்வதேச முனையமான டி2 (T2) வழியாகச் சென்றார். முதல்வரின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு விஐபி நுழைவாயில் எண் 6-ஐப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
முதல்வருக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவருடன் வருபவர்கள் பொதுவான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (BCAS) உத்தரவிட்டிருந்தது. தனிப்பட்ட முறையில் விஐபி வசதியைப் பயன்படுத்த விரும்பாத முதல்வர், பொதுமக்களுடன் இணைந்து செல்ல முடிவு செய்தார்.
இதனிடையே, முதல்வரின் குழுவினர் அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் டி9 (D9) நுழைவாயில் வழியாகச் செல்ல விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். முதல்வரின் வருகையையொட்டி, அங்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும் உள்ளூர் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.


