காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலத்தில், 422 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டம் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் தொழிற்பூங்காவில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


