சட்டமன்றமா? சினிமா திரையரங்கா என தெரியவில்லை? - சீமான்
சட்டமன்றம் தற்போது சினிமா திரையரங்கு போல செயல்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சட்டமன்றக் கட்டிடத்தில் நிலவும் சூழல் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜீவானந்தம், காமராஜர் மற்றும் கக்கன் போன்ற தலைவர்கள் பணியாற்றிய சட்டமன்றம் தற்போது தனது கண்ணியத்தை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முதலமைச்சரைச் சுற்றியுள்ள சூழல் மற்றும் அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


