திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், ஆம்னி பேருந்துகளில் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து ராமநாதபுரம் செல்வதற்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரையிலும், கோவை மற்றும் ஈரோடு செல்வதற்கு ரூ.4,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், சென்னை முதல் நெல்லை மற்றும் நாகர்கோவில் வரையிலான பயணத்திற்கு ரூ.4,800 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்து Redbus செயலி மூலமாக நடைபெறுகிறது, கண்டும் காணாமல் உள்ளது தமிழக அரசு.


