புகழ்பெற்ற தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் மதுரையில் காலமானார். வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
கடந்த 5-ம் தேதி சிவகாசியில் நடைபெற்ற சன் டிவி சிறப்பு பட்டிமன்றத்தில் அவர் நடுவராகப் பங்கேற்றார். 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியுள்ள சாலமன் பாப்பையா, இலக்கியம் மற்றும் புராணங்களை எளிய மக்களின் வாழ்வியலோடு இணைத்துப் பேசி பட்டிமன்றங்களுக்குப் புதிய பரிமாணத்தை வழங்கியவர்.
தனது தனித்துவமான குரல் வளத்தால் பட்டிமன்றங்களை கலகலப்பாக நடத்தி வந்த இவருக்கு, 2021-ம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இவரது மறைவு தமிழ் இலக்கிய மற்றும் பட்டிமன்ற உலகிற்குப் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

