இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது என அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். மதுராந்தகம் தொகுதிக்கு தொடர்பில்லாத எழும்பூரைச் சேர்ந்த பரந்தாமனை திமுக வேட்பாளராக அறிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூரில் போட்டியிட யாரும் தயாராக இல்லாத காரணத்தினாலேயே பரந்தாமன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்று அவர் குற்றம் சாட்டினார். மதுராந்தகத்திற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


