துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. எனினும், வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ள இந்திய அணி மறுத்துவிட்டது. இது பிசிசிஐ எடுத்த திட்டமிட்ட முடிவு என்று இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் தெரிவித்தார்.
கடந்த 2025 ஆடவர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியின்போதும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக இருக்கும் மொஹ்சின் நக்வி இருந்ததால், இந்திய அணி கோப்பையைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் பிசிசிஐ நிர்வாகிகள் ராஜீவ் சுக்லா மற்றும் தேவஜித் சைகியா ஆகியோர் வீராங்கனைகளுக்கு பதக்கங்களை வழங்கினர்.
முன்னதாக, ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் அரைசதங்களால் இந்திய அணி 183 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணியின் அபார பந்துவீச்சால் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.



%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F04%2Fkockviratkohli-2026-09-04-12-47-22.jpg&w=3840&q=75)

