நெல்லை விளம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரியாணி கடை உரிமையாளர் ஜெயந்த் (39) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் பிரியாணி தயாரிப்பது போன்ற சர்ச்சைக்குரிய விளம்பர பேனரை அவர் தனது கடையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த பேனரில் அரபிக் ஸ்டைல் 65 பிரியாணிக்கு 99 ரூபாய் என சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

