பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1909-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி பிறந்த அவர், 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி வரை வாழ்ந்தார்.
தன்மான உணர்வுடன் எழுந்து நின்று, உழைப்பாளிகளை உயர்த்தி, அறியாமையை அகற்றி, மானத்துடன் வாழ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அறிவே துணையாகவும், அன்பே குணமாகவும் இருக்க வேண்டும் என்பது அவரது போதனையாக உள்ளது.


