பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது. தலைமைத்துவம் குறித்து அவர் பேசிய கருத்துகள் முதலமைச்சர் விஜயை விமர்சிப்பதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.
இது குறித்து விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸில் கூறப்படும் கருத்துகளோ அல்லது குறிப்புகளோ, நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு, நிறுவனம், சித்தாந்தம் அல்லது சூழ்நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ, அங்கீகரிப்பதாகவோ அல்லது கருத்து தெரிவிப்பதாகவோ கருதப்படக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


