மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடும் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மீது காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி விடுவதாக தவெக அரசை திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். மாணவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் உடற்கூறு ஆய்வில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யாமல், நீதி கோருபவர்களைக் கைது செய்வது கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்தார்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் தவெக அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாகச் செயல்படுவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
