மதுரையில் 11-ஆம் வகுப்பு மாணவர் தமிழ்செல்வன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை இதுவரை கைது செய்யாததைக் கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
நீதி கேட்டுப் போராடிய மாணவனின் தாயாரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

