முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது அவர் இக்கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, சட்டத்தின் ஏழு பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

