தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு அரசு திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் நடப்பு மாதத்தில் மட்டும் இதுவரை 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


