குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்களில் பரவலாக வெப்பச்சலன மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது. ஜிஎஃப்எஸ் (GFS) தரவுகளின்படி, செப்டம்பர் 15-ம் தேதி வரையிலான 48 மணி நேரத்திற்கான மழைப்பொழிவு முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு.
அடுத்த ஒரு வாரத்திற்கு வேலூர் , இராணிப்பேட்டை , திமலை, திருப்பத்தூர் , கிருஷ்ணகிரி , சேலம் , தர்மபுரி , கள்ளக்குறிச்சி , பெரம்பலூர் , அரியலூர் , திருச்சி , கரூர் , நாமக்கல் , ஈரோடு , திருப்பூர் , கோயம்புத்தூர் , திண்டுக்கல் , மதுரை , சிவகங்கை , விருதுநகர் , தென்காசி உள்பட 21 மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.

