ரூ.2,000 வரையிலான UPI மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளோ அல்லது சேவை நிறுவனங்களோ எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு முறையான அரசாணையை வெளியிட்டுள்ளது.
வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டும் MDR சேவை கட்டணத்தை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும், தனிநபர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் இந்த MDR கட்டணம் பொருந்தாது என ஏற்கனவே அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

