UPI பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். வணிகர்களிடம் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அது விலைவாசி உயர்விற்கு வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சரைச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத பட்சத்தில், நாடு முழுவதும் உள்ள வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
