புதுக்கோட்டை மாவட்ட நகர் பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் வழக்கத்தை விடக் குறைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பால் பாக்கெட்டுகள் போதிய அளவில் கிடைக்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
வறட்சி உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் 50,000 லிட்டரில் இருந்து 43,000 லிட்டராகக் குறைந்துள்ளதாக ஆவின் பால் மண்டல மேலாளர் விருச்சப்பதாஸ் தெரிவித்தார். கொள்முதல் விலையை அரசு உயர்த்தியுள்ளதால், அடுத்த பத்து நாட்களில் பால் விநியோகம் சீராகும் என்றும், வரும் காலங்களில் கொள்முதலும் விற்பனையும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.


