சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 அதிகரித்து ரூ.14,065 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.2,50,000 என விற்பனை செய்யப்படுவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

