நவம்பர் 3-ஆம் தேதிக்குப் பிறகு ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்கா, அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு வளைகுடா நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது மற்றொரு தாக்குதலை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹண்டர்ப்ரூக் (Hunterbrook) நடத்திய ஆய்வின்படி, செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 29 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான சுமார் 193 சி-17 மற்றும் சி-5எம் சரக்கு விமானங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமானப்படை தளம் இதற்கான முக்கிய போக்குவரத்து மையமாகச் செயல்படுகிறது. அங்கிருந்து இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள தளங்களுக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இந்த விமானப் போக்குவரத்து வேகம் தற்போது அதிகரித்துள்ளது.
அக்டோபர் 29 அன்று மட்டும் ஒன்பது விமானங்கள் வந்துள்ளன. துருப்புக்கள், ஆயுதங்கள் மற்றும் போர் உபகரணங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் இந்த கனரக போக்குவரத்து விமானங்கள், பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
