பெங்களூருவில் குடிநீரை வாகனங்களைக் கழுவுதல், தோட்டம் வளர்த்தல், நீச்சல் குளங்களை நிரப்புதல் மற்றும் பொது இடங்களைச் சுத்தம் செய்தல் போன்ற அத்தியாவசியமற்ற தேவைகளுக்குப் பயன்படுத்த பெங்களூரு குடிநீர் வாரியம் தடை விதித்துள்ளது. நீர் பயன்பாட்டைக் கண்காணிக்கும் வகையில், அனைத்து இடங்களிலும் நீர்மானிகளை (water meters) பொருத்த வேண்டும் என்றும் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் குடிநீர் விநியோகம் 50 சதவீதம் வரை குறைக்கப்படும் என்றும் குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



