தஞ்சையில் திமுகவினர் பெருமளவில் திரண்டதால், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள வாகனத்தில் இருந்து இறங்க அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
எந்த காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டதோ, அதே காவல் நிலையத்திற்குத்தான் தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதனால் காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


