பள்ளி பாடத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்வதற்காக ரூ.25 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
மேலும், போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த பள்ளி வளாகங்களில் 10581 என்ற உதவி எண் காட்சிப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

