தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் (AI and Machine Learning) தொழில்நுட்பங்களுக்கான பயிற்சி மையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் இந்த மையங்கள் நிறுவப்பட உள்ளன. உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதனுடன், மின்சார வாகனங்கள் (EV) பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கம் குறித்த பயிற்சிகளை 22,000-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்வதால், இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
