தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பால் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை அதிகரிக்கும் நோக்கில், இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
இதன் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள பால் பண்ணையாளர்களுக்கு சுமார் 10,000 கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாநில பட்ஜெட்டில் ரூ. 57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.



%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F16%2Fvpgramg-2026-08-16-13-08-42.jpg&w=3840&q=75)