முழு விவசாயக் கடனையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை சட்டப்பேரவை வளாகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கத்தி திரைப்படத்தில் விவசாயம் குறித்துப் பேசியவர், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விவசாயிகளின் நலன் கருதி அரசு உடனடியாகக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




