மதுபான விற்பனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் சமூக சீர்கேடுகளைக் கட்டுப்படுத்த, மதுபானங்கள் மீது 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீவை' புதிய வரியாக விதிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரிச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாய், மது பாட்டில்களை முறையாக மறுசுழற்சி செய்தல், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுதல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கும் இந்த நிதி ஒதுக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்




