விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு விசாரணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று நடைபெற இருந்தது. சட்டப்பேரவை நடைபெறுவதால், வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
காணொளி வாயிலாக ஆஜரான சங்கீதா, வழக்கின் விசாரணையை இன்றே நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். இரு தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலித்த செங்கல்பட்டு நீதிமன்றம், வழக்கின் விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



