அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ.14,000 கோடி குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தவெகவின் முதல் பட்ஜெட்டில் இந்த நிதி குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான (TAPS) ஆண்டு ஒதுக்கீடான ரூ.11,000 கோடி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



