கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி எடுத்தது நான்தான் என்றும், அதில் அவமானம் ஏற்பட்டால் தமிழ்நாடு மக்களுக்காக அதைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சிபிஎம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி, தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகாவிற்குச் சென்று மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார். முதலமைச்சர் அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்வதாகக் கூறியது தமிழ்நாடு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் என அவர் விமர்சித்தார்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



