பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்தார். ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

