அரக்கோணத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியும் மதுபாட்டில்கள் வழங்கப்படாததால் நுகர்வோர் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆன்லைனில் மது வாங்கும் திட்டத்தின் கீழ் பணம் செலுத்திய வாடிக்கையாளர்களிடம், கடையில் அதற்கான வசதி இல்லை எனக் கூறி ஊழியர்கள் மதுபாட்டில்களை வழங்க மறுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றவர்களிடம், தாங்கள் புகாரைப் பெற மட்டுமே முடியும் என்றும், நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் முறையிடுமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F08%2Fvlcsnap-2026-08-08-11h03m14s462-2026-08-08-11-04-32.png&w=3840&q=75)
%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)