இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறும் முன்பே முதியோர்கள் அதிகம் வசிக்கும் நாடாக மாறி வருகிறது என 'டிரான்ஸ்பார்ம் ரூரல் இந்தியா' ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 2050-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை சுமார் 34.7 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்காகும்.
இந்த முதியோர்களில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களிலேயே வசிப்பார்கள் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகள் பொருளாதார ரீதியாக உயர்ந்த பின்னரே முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இந்தியா குறைந்த வருவாய் நிலையிலேயே இந்த மக்கள் தொகை மாற்றத்தைச் சந்திப்பது சவாலாகக் கருதப்படுகிறது.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)