அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் கூட்டணி முடிவுகள் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 2021 மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்கள், அத்துடன் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்விகளுக்குத் தலைமை எடுத்த தவறான முடிவுகளே முக்கிய காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை கட்சி தவறவிட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், கடந்த காலங்களில் பாஜக, பாமக, தேமுதிக மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் தலைமை சுணக்கம் காட்டியதாகவும், கட்சியின் கொள்கைகளுக்கு முரணான முடிவுகளால் வேட்பாளர்கள் தோல்வியைச் சந்தித்ததோடு கட்சிக்கு நிதி இழப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)