சேலத்தில் தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சில வழித்தடங்களில் பேருந்து கட்டணம் 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
