முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது மேஜையில் இருப்பதாகக் குறிப்பிட்ட மூன்று கோப்புகள் குறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு வார கால அவகாசம் அளித்துள்ளார். அந்த மூன்று கோப்புகளையும் அடுத்த ஏழு நாட்களுக்குள் திறக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் காலக்கெடுவுக்குள் கோப்புகளைச் சமர்ப்பிக்கத் தவறினால், சட்டப்பேரவையில் தவறான தகவல்களை அளித்ததாக முதலமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

