ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தண்ணீர் திறக்க மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்திருந்தார். எனினும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
