தமது பேச்சு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். தான் எந்தவொரு உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தாய், தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் நான் என்று குறிப்பிட்ட அவர், தனது பேச்சைத் திரித்துச் சித்தரித்து அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
