சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனியார் பேருந்து கட்டணம் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயண தூரத்திற்கு ஏற்ப பேருந்து கட்டணம் ரூ.5 முதல் ரூ.19 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், தனியார் பேருந்து நிறுவனங்கள் தன்னிச்சையாக இந்த கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளன.



%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F12%2Fnellaiprotestpowercut-2026-09-12-11-06-47.jpg&w=3840&q=75)