மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்த்திறப்பு, தற்போது 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மொத்தம் 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.31 அடியாக உள்ளது.
