கர்நாடக மாநிலம் ஹனூர் தாலுகாவில் வசித்து வந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய தமிழர்கள், ஆகஸ்ட் 15 அதிகாலையில் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வனத்துறையினர் அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்து தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
