சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை அமைச்சர் குறிப்பிட்டது தவறு எனச் சுட்டிக்காட்டிய நிலையில், அவர் சார்பாக முதல்வர் விஜய் மன்னிப்பு கோரினார். திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இந்த விவகாரத்தை அவையில் எழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், அமைச்சர் கருணாநிதி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது தவறுதான் என்று ஒப்புக்கொண்டார். மேலும், அந்த அமைச்சரின் சார்பாக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

