காவிரி ஆற்றில் உரிய நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. விசாரணையின்போது, காவிரியில் உரிய நீரை ஏன் திறந்துவிடவில்லை என கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நடப்பாண்டு வறட்சி ஆண்டாக உள்ளதாகத் தெரிவித்த கர்நாடக அரசு, தற்போது வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டது. மேலும், மேகதாது அணைத் திட்டத்திற்குத் தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும் கர்நாடக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

