தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான புதிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதன்படி, 75 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகின்றன. 75 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான பயிர்க்கடன்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும்.
முன்பு 75 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்தத் தொகையுடன் கூடுதலாக 40 ஆயிரம் ரூபாய் சேர்த்து, மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

